நல்ல நூல்களைக் கற்போம்
* கடவுள் உனக்குக் கொடுத்திருக்கும் சக்தியை அறிந்து கொள். அறிந்து முயற்சி செய்தால் அறம் செய்ய முடியும். சக்தி இல்லை என்று நினைப்பது தவறு.* இன்பம் தருவது போல் தோன்றும் பழக்க வழக்கங்களுக்கு இடம் தரக்கூடாது. அப்படி செய்தால் துன்பம் உன்னை வந்து சேராது.* நற்குணமுடைய ஒருவருக்கு நாம் சிறிய உதவி செய்தாலும், அவர் அதை மறவாமல் நமக்குப் பெரிய அளவில் உரியவாறு உதவி செய்யத் தவறமாட்டார்.* நாம் எவ்விதக் கைமாறும் கருதாமல் பிறருக்கு உதவி செய்ய வேண்டும். அந்த உதவி வீண் போகாது. அதன் பலன் பெரிய அளவில் நமக்குக் கிடைக்கும் என்பது உறுதி.* கற்க வேண்டிய நூல்களைக் கற்று உனது அறியாமையை நீக்கிக் கொள், அதேபோல் நல்ல நூல்களைக் கற்பதிலிருந்து விலகக்கூடாது.* நல்ல செயல்களை நீயே முன் நின்று செய்வதுடன், மனம் அறிய உண்மையாக வாழ்வதே நேர்மையான வாழ்க்கை.* நீ கற்றறிந்தது கடுகளவு தான். கற்க வேண்டியது இன்னும் ஏராளமாக உள்ளது என்பதை மனதில் இருத்திக் கொள்.-அவ்வையார்