உள்ளூர் செய்திகள்

கடவுளே நமக்கு அடைக்கலம்

* அகத்தூய்மையுடையோர்க்கு எல்லாமே தூய்மை. கெட்டழிந்தவர்களுக்கும் நம்பாதவர்களுக்குமோ எதுவுமே தூய்மை இல்லை.* அகங்காரம் வரும் போது அதற்குப் பின்னே அவமானமும் வந்து சேரும்.* அக்கிரமக்காரர் எதிர்பார்ப்பது அழிந்துபோகும். நேர்மையானவனோ இடுக்கண்ணிலிருந்து விடுவிக்க படுவான்.* தன்னிலே அசுத்தம் என்று எதுவுமில்லை. ஆனால் எதையும் அசுத்தம் என்று மதிப்பவனுக்குத் தான் அது அசுத்தமாயிருக்கிறது.* கடவுள் நமக்கு அச்சம் நிறைந்த ஜீவனைக் கொடுக்கவில்லை. சக்தியும், அன்பும், மனஅமைதியும் உள்ள ஜீவனைத்தான் கொடுத்திருக்கிறார்.* ஒடுக்கி அமுக்கப்பட்டவர்களுக்குக் கடவுளே அடைக்கலமானவர்.* பலசாலியை விடக் கோபம் கொள்வதில் மிதமாக இருப்பவனே சிறந்தவன். ராஜ்யங்களைக் கைப்பற்றுபவனை விடத் தன் உணர்ச்சியை அடக்கியாளுபவனே சிறந்தவன்.- பைபிள் பொன்மொழிகள்