உள்ளூர் செய்திகள்

சுறுசுறுப்புடன் இருங்கள்

* சுறுசுறுப்பும், நல்ல நடத்தையும் கொண்டவன் வீட்டில் லட்சுமி வீற்றிருப்பாள். சுயபுத்தியும், விடாமுயற்சியும் பெற்றவன் புகழ் மிக்கவனாக விளங்குவான்.* நல்லவர்களின் உபதேசம் காது வழியாகச் செல்லும் அமுதம். இதை ஏற்க மறுப்பவன் காது இருந்தும் அதைப் பயன்படுத்தவில்லை என்றே பொருள். * உண்மையும், பொறுமையும் கொண்டவன் இந்த உலகையே வெல்லும் சக்தி பெறுவான். அவனுடைய சொல்லை உயிர்கள் அனைத்தும் மதிக்கும்.* ஆபத்து காலத்திலும், தர்மத்தைக் காப்பதற்காகவும் பொய் சொன்னால் அது பாவமாக கருதப் படுவதில்லை.-ஜெயேந்திரர்