தர்மம் தலை காக்கும்
UPDATED : மார் 14, 2016 | ADDED : மார் 14, 2016
* தர்மம் தலை காக்கும் என்பார்கள். அறம் செய விரும்பு என்று அவ்வையும் நமக்கு வழிகாட்டி இருக்கிறார்.* உங்கள் சக்திக்கு உட்பட்டு தர்மம் செய்யுங்கள். அதன் பலன் பன்மடங்காக திரும்ப கிடைக்கும்.* வழிபாட்டில் சொல்லும் ஸ்லோகங்களும், பாடல்களும் தவறு இல்லாமல் இருப்பது அவசியம். பொருள் தெரிந்து சொல்வது இன்னும் சிறப்பு.* விதி வலிமையானது. கடவுளின் அருளால் விதியின் வலிமையை மாற்றி அமைக்க முடியும்.* எந்த விரதத்தை மேற்கொண்டாலும் மனம், உடல் இரண்டாலும் துாய்மையுடன் இருப்பது மிகவும் அவசியம்.-ஜெயேந்திரர்