உள்ளூர் செய்திகள்

அதிகாலையில் எழுங்கள்

* அதிகாலையில் எழுவது நல்லது. எழுந்ததும் முதல் கடமையாக தியானத்தில் ஈடுபடுங்கள்.* நல்லது செய் நல்லதே நடக்கும் என்பர். சொல்லாலும் செயலாலும் பிறருக்கு நன்மை மட்டுமே செய்யுங்கள்.* வாரம் ஒருமுறையாவது விரதமிருங்கள். இதனால் உடலும் மனமும் ஆரோக்கியத்துடன் இருக்கும்.* பலனை எதிர்பார்க்காமல் வழிபாட்டில் ஈடுபடுங்கள். உங்களின் தேவைகளை கடவுள் நன்கு அறிவார்.* பெற்றோர் பிள்ளைகளுக்காக சொத்து சேர்க்க வேண்டாம். ஆனால், தவறியும் பாவச்சுமையைச் சேர்ப்பது கூடாது.* தினமும் வீட்டில் வழிபாடு செய்வது அவசியம்.- ஜெயேந்திரர்