நல்ல நூல்களைப் படியுங்கள்
UPDATED : ஜன 01, 2017 | ADDED : ஜன 01, 2017
* நல்ல நூல்களைத் தேர்ந்தெடுத்து படியுங்கள். இதன் மூலம் அறிவும், மனமும் விசாலமடைகிறது. * பிறருக்கு கொடுத்து மகிழ்வது மேலானது. பிறர் கொடுப்பதை தடுக்க முயல்வது இழிவானது.* உடல் இயக்கத்திற்கு மூச்சுக்காற்று அவசியம். உலகின் இயக்கத்திற்கு மூச்சுக்காற்றாக வேதங்கள் இருக்கின்றன.* பிச்சை எடுப்பது தவறு. உழைப்பால் கிடைக்கும் செல்வமே போற்றத்தக்கது.* கோபம் எழுவது இயற்கை. அதிலிருந்து விடுபடும் முயற்சியைக் கைவிடக்கூடாது.- ஜெயேந்திரர்