தைரியமே சிறந்த துணை
UPDATED : மே 31, 2016 | ADDED : மே 31, 2016
* தைரியம் ஒன்றே சிறந்த துணையாகும். உலகில் எதையும் சாதிக்கும் வலிமை இதற்கு மட்டுமே உண்டு.* உலக விஷயங்களில் விருப்பம் இருக்கும் வரை மனிதனுக்கு பிறவிச்சங்கிலி தொடர்ந்து கொண்டே இருக்கும்.* நல்லவர்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும். ஒருபோதும் அவர்களின் உள்ளம் நோகும் விதத்தில் நடப்பது கூடாது.* கோபத்தை அறவே கைவிட்டவர்களின் வாழ்வில் துன்பத்திற்கு இடமே இல்லை.* சுயநலத்தால் பொய் பேசுவது பாவமாகும்.- ஜெயேந்திரர்