உள்ளூர் செய்திகள்

நல்லவரோடு பழகு

* இன்பத்தைக் கண்டு மகிழும் மனிதன், துன்பம் கண்டு துவள்வது கூடாது. ஏற்றத்தாழ்வு என்பது வாழ்வில் சகஜமானது.* புகழைக் கண்டு மயங்காத நல்லவர்களும் உலகில் இருக்கவே செய்கிறார்கள்.* நல்ல நுால்கள் மனக்கோணலை நிமிர்த்தி, மனிதனை நேர்வழியில் நடக்கச் செய்து விடும்.* படிப்பால் உண்டாகும் அறிவை விட, அனுபவத்தால் கிடைக்கும் அறிவே உயர்ந்தது.* நல்லவர்களின் நட்பைப் பெறாவிட்டால் வாழ்வில் முன்னேற்றம் ஒருநாளும் உண்டாகாது.-வாரியார்