உள்ளூர் செய்திகள்

திருத்திக் கொள்ளுங்கள்

* நல்லவர்கள் சொல்லும் குறைகளைத் திருத்திக் கொள்ளவும், மூடர்கள் சொல்லும் குறையை புறக்கணிக்கவும் பழகுங்கள். * மனிதனாகப் பிறந்த அனைவருக்கும் லட்சியம் இருக்க வேண்டும் இல்லாவிட்டால் மிருகநிலைக்கு தாழ்ந்து விடுவோம்.* படிப்பினால் ஏற்படும் அறிவை விட, அனுபவத்தால் உண்டாகும் அறிவு அதிக பயனைக் கொடுக்கும். * வெயில் அதிகமாக இருந்தால் மழை வர வாய்ப்பு உண்டாகும். அதுபோல, அநீதி அதிகமாகும் போது பூமியில் மகான்கள் பிறக்கின்றனர். - வாரியார்