உள்ளூர் செய்திகள்

திருப்தியுடன் வாழப் பழகு

* போதும் என்ற திருப்தி உண்டாகி விட்டால் மகிழ்ச்சி என்னும் மாளிகையின் கதவு திறந்து விடும். * வியாதி தீர பத்தியம் இருப்பது போல, தெய்வீக வழியில் நடப்பவன் ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும். * நாம் இதுவரை முன்னேறாமல் இருப்பதற்கு காரணம், நல்லவர்களோடு பழகாமல் இருப்பதே. * சந்தேக புத்தி மனிதனை கொன்று விடும். இதை விடக் கொடிய எதிரி வேறு யாரும் கிடையாது. * ஏழை, பணக்காரன் என்று பாகுபாடு பார்ப்பது கூடாது. எல்லா உயிரிலும் வீற்றிருப்பவர் ஒரே கடவுளே. வாரியார்