இனிமையாய் பேசுங்க!
UPDATED : செப் 11, 2013 | ADDED : செப் 11, 2013
* விலங்கையும், மனிதனையும் பிரித்துக் காட்டும் எல்லைக்கல்லே ஒழுக்கம். ஒழுக்கம் தவறி விட்டால் மனிதன் தன் நிலையிலிருந்து தாழ்ந்து விடுகிறான்.* வியாபாரி அன்றாடம் லாபநஷ்டம் பார்ப்பது போல, இன்றைய பொழுதை எப்படி கழித்தோம் என்று நம்மை நாமே சோதித்துப் பார்க்க வேண்டும்.* மனிதனுடைய உயர்வும் தாழ்வும் நாக்கைப் பொறுத்தே அமைகிறது. அதனால், நாவடக்கத்துடன் நயமாகப் பேசுவது நன்மை தரும்.* மழை சுத்தமான நீராக இருந்தாலும், சேருமிடத்தைப் பொறுத்து அதன் தன்மை மாறுகிறது. அதுபோல, மனிதன் யாருடன் சேர்கிறானோ அந்த குணத்தையே அடைகிறான்.* ஒருவரின் புறத்தோற்றத்தைக் கண்டு முடிவு செய்து விடாதீர்கள். அவரது பண்பைப் பொறுத்தே நல்லது கெட்டதை உறுதி செய்ய வேண்டும்.- வாரியார்