வாய்மையே வெல்லும்
UPDATED : ஜன 09, 2014 | ADDED : ஜன 09, 2014
* பிறரை அழிக்க நினைப்பவன், தன்னைத் தானே அழித்துக் கொள்ள முயல்கிறான். இதுவே இயற்கையின் விதி. * நல்லவர்களின் மனதில் உண்டாகும் நல்ல எண்ணங்கள் ஒருபோதும் வீணாவது இல்லை. * இல்லாத நற்குணத்தை இருப்பதாக மற்றவர் முன் நடிப்பது நல்லதல்ல. இயல்பை மறைத்தல் கூடாது. * தோற்பது போல தோன்றினாலும், இறுதியில் வாய்மை தான் வெல்லும். நன்மையான பலனே கிடைக்கும். - காந்திஜி