நட்புக்கரம் நீட்டுங்கள்
UPDATED : ஜூன் 21, 2015 | ADDED : ஜூன் 21, 2015
* நல்லவர்களோடு நெருங்கிப் பழகுங்கள். நட்பு இல்லாத வாழ்க்கை அர்த்தமற்றது.* அகிம்சை வழியில் எல்லா உயிர்களையும் நேசிப்பவனே உண்மையான வீரன்.* ஆசை காரணமாக தகுதியற்ற செயலில் ஈடுபடுபவன் பெருமையை இழப்பான்.* புகழை எதிர்பார்த்து எந்தச் செயலிலும் ஈடுபடாதீர்கள். தன்னைத்தானே புகழ்வது பைத்தியக்காரனின் செயல். * பிறர் செய்த உதவிக்காக நன்றி பாராட்டுங்கள். யானைத் தந்தம் போல நன்றியுணர்வு மதிப்பு மிக்கது.* பிறரிடம் பொருள் பெற்று வாழ்வதை விட, வறுமையில் வாடுவது உயர்வானது.-மகாவீரர்