லட்சியத்தை நோக்கி முன்னேறு
UPDATED : ஏப் 01, 2016 | ADDED : ஏப் 01, 2016
* எத்தனை இடையூறு குறுக்கிட்டாலும் கலங்காதே. லட்சியத்தை நோக்கி முன்னேறிக் கொண்டேயிரு.* முயற்சி ஒன்றே மகிழ்ச்சிக்கான வழி. முயற்சி இல்லாவிட்டால் வாழ்வில் எந்த இன்பத்தையும் காண முடியாது.* உலகில் மோசமான வேலை என்று எதுவுமே இல்லை. வேலை செய்பவர்களில் தான் மோசமான மனிதர்கள் இருக்கிறார்கள்.* அன்றாட வாழ்வில் அழகும், ஒழுங்கும் ஏற்படுத்தி விட்டால் போதும். அதுவே செயல்களிலும் பிரதிபலிக்கத் தொடங்கும்.- ஸ்ரீஅன்னை