வளர்வதற்கான வழி
UPDATED : செப் 15, 2014 | ADDED : செப் 15, 2014
* அமைதியில் உண்டாகும் ஆற்றலுக்கு அளவில்லை. எல்லா தீமையையும் அதன் மூலம் போக்கி விட முடியும்.* மனதிற்குப் போதுமான வேலை தராவிட்டால் மனம் சஞ்சலப்படத் தொடங்கி விடும்.* படிப்பதை அடியோடு புறக்கணிப்பது கூடாது. நல்ல நுால்களைத் தேர்ந்தெடுத்து படிப்பது அவசியம்.* ஆத்திரமோ அவசரமோ வேண்டாம். செய்வதைச் செவ்வனே திருந்தச் செய்து வந்தால் போதும்.* தெய்வத்தைச் சரணடைவதால் யாரும் குறைந்து போவதில்லை. மாறாக வளரவே செய்கிறார்கள்.- ஸ்ரீஅன்னை