உள்ளூர் செய்திகள்

மனதை வெல்ல வழி

*நீ தியாகம் செய்ய தயாராக இருந்தால் மட்டுமே, உலகிலுள்ள மற்றவர்களின் மனங்களை வெல்ல முடியும். *அன்பில் கரைந்து விடு. அது உன்னை சொர்க்கத்தில் சேர்த்து விடும். *எதையும் தெரியாது என சொல்லாதே. சாதிக்கும் துணிவோடு வீரனை போல செயல்படு.*உன்னை பற்றி எண்ணாத நேரத்தில் உண்மையான வாழ்க்கையை நீ அனுபவிக்கிறாய். *உனக்கு நீயே செய்து கொள்ளும் துன்பத்தை தவிர, வேறெதுவும் உன்னை நெருங்குவதில்லை. - விவேகானந்தர்