நல்வழியில் தேடுங்கள்
UPDATED : அக் 26, 2014 | ADDED : அக் 26, 2014
* கோபத்தை கைவிட்ட மனிதனின் வாழ்வில் துன்பம் குறுக்கிடுவதில்லை.* புலன்களின் கவர்ச்சி அறிஞர்களைக் கூட தடுமாறச் செய்து விடுகிறது.* தர்மத்தில் நம்பிக்கை இல்லாதவனுக்கு மற்ற நல்ல விஷயங்களிலும் நம்பிக்கை ஏற்படுவதில்லை.* மனம், வாக்கு, உடம்பு இந்த மூன்றையும் எப்போதும் அடக்கியாள கற்றுக் கொள்ள வேண்டும்.* உயிருடன் இருக்கும் வரை உடன்பிறந்த குணங்கள் ஒருவரை விட்டு நீங்குவதில்லை.* நல்வழியில் செல்வம் தேடி நல்லதையே செய்யுங்கள்.- வியாசர்