சிந்தித்து செயல்படு
UPDATED : செப் 05, 2025 | ADDED : செப் 05, 2025
மனம் போன பாதையில் நடப்பவன் புத்தியை இழப்பான். இதிலிருந்து தப்ப கட்டுப்பாடுடன் மனதை கையாள்வது அவசியம். சரி... எப்படி கட்டுப்படுத்துவது? அதிகம் பேச வேண்டாம். பேசும் சூழல் வந்தால் கண்ணியத்துடன் அளந்து பேசுங்கள். அதுவும் நாக்கு நேர்மையாக இருக்க வேண்டும். அப்போது தான் இதயம் உண்மையின் பாதையில் செல்லும். பேச்சு மோசமானதாக இருந்தால் முடிவும் அப்படியே ஆகி விடும். அதைப் போல ஒரு செயலைச் செய்யும் முன் அதன் முடிவு பற்றி சிந்தியுங்கள். நல்லவர்களிடம் ஆலோசனை செய்ய வேண்டும். இறுதியில் சரி என தோன்றுவதை செயல்படுத்துங்கள். இப்படி சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே வாழ்வு சிறக்கும்.