உள்ளூர் செய்திகள்

அண்டை வீட்டாரிடம்...

சிலர் தம் அண்டை வீட்டாரிடம் இறைநெறி பற்றி பேசுவதில்லை. இறைவனைப் பற்றி அறியாமல் இருந்தால் தீமை உண்டாகும் என்பது பற்றி உணர்த்துவதில்லை. இது வருந்தத்தக்க விஷயம். இறைவன் மீது ஆணையாக! அண்டைவீட்டாருக்கு அவசியம் இறைநெறியைக் கற்றுத்தர வேண்டும். அவற்றின் ஆழ்ந்த கருத்துக்களை எடுத்துச் சொல்ல வேண்டும். நற்செயல்களில் ஈடுபடத் துாண்ட வேண்டும்.