உறவுக்கு பயப்படு
UPDATED : செப் 29, 2025 | ADDED : செப் 29, 2025
உறவுகள் இல்லை என்றால் வாழ முடியுமா... முடியாது. குற்றம் பார்த்தால் சுற்றம் இல்லை என்பது பழமொழி. எப்போதும் குற்றம் சொல்பவரை விட்டு உறவினர்கள் விலகுவது இயல்பு. கசப்பான விஷயங்களை மறந்து விடுங்கள். இறைவனுக்கு அடுத்து பயப்பட வேண்டியது உறவினருக்குத்தான். அவர்களின் மகிழ்ச்சியில் தான் இறைவனின் மகிழ்ச்சி இருக்கிறது. அதனால் விட்டுப் போன உறவுகளை புதுப்பிப்போம். அவர்களை மதிப்போம்.