உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் / பிழைக்க தெரிந்த அரசியல்வாதி!

பிழைக்க தெரிந்த அரசியல்வாதி!

'கிடைத்த பதவியை வைத்து, சத்தமில்லாமல் காலத்தை ஓட்ட வேண்டியது தான்...' என, தனக்கு தானே திருப்திபடுகிறார், மஹாராஷ்டிரா துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜித் பவார்.தேசியவாதகாங்கிரசை நிறுவியவரானசரத் பவாரின் அண்ணன்மகன் தான், இந்த அஜித் பவார். சரத் பவாரின் நம்பிக்கைக்குரியதளபதியாக இருந்து, பின், அவரது கட்சியை இரண்டாக உடைத்து, பா.ஜ., கூட்டணியில் ஐக்கியமானார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன் நடந்த லோக்சபா தேர்தலில், இவரது கட்சி பெரிய அளவில் போணியாகவில்லை. இதனால், 'அஜித் பவாரின் அரசியல் எதிர்காலம் அஸ்தமனமாகி விட்டது' என, மஹாராஷ்டிராவில் பேச்சு எழுந்தது. ஆனால், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், தலைகீழ் மாற்றம் ஏற்பட்டது. அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ், 41 தொகுதிகளில் வெற்றி பெற்றது. சரத் பவார் தரப்போ, 10 இடங்களில் மட்டுமே வென்றது. ஆனாலும், 'எங்களுக்கு அந்த பதவி வேண்டும்; இந்த பதவி வேண்டும்...' என, அடம் பிடிக்காமல்,பா.ஜ., மேலிடம் கொடுத்த துணை முதல்வர்பதவியை சத்தமில்லாமல் ஏற்றுக் கொண்டார் அஜித் பவார்.'எங்கள் எம்.எல்.ஏ.,க்களுக்கு எத்தனை அமைச்சர்பதவிகளை கொடுக்க முடியுமோ, அதைக் கொடுத்தால் போதும்...' என்றும், மறைமுகமாக பா.ஜ.,விடம் சரண்டராகி விட்டார்.'பிழைக்க தெரிந்த அரசியல்வாதி...' என, அஜித் பவாரை கிண்டல் அடிக்கின்றனர், மஹாராஷ்டிரா மக்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ