மேலும் செய்திகள்
லஞ்சம் வந்த வழி... ஆளுங்கட்சி விஐபி 'கிலி'
10-Nov-2025
'முக்கியமான பிரச்னையை விளையாட்டாக பேசுவது போல் பேசி, புரிய வேண்டியவர்களுக்கு புரிய வைத்து விட்டார்...' என, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான நிதின் கட்கரியை பார்த்து ஆச்சரியப்படுகின்றனர், அவரது கட்சியினர். மத்திய அமைச்சர்களில் திறமையாக செயல்படுபவர் என, ஆளும் கட்சியினர் மட்டுமல்லாமல், எதிர்க்கட்சியினராலும் பாராட்டப்படுபவர், நிதின் கட்கரி. நாடு முழுது ம் சாலைகளின் தரம் மேம்பட்டு இருப்பதற்கு, நிதின் கட்கரி முக்கிய காரண மாக கூறப்படுகிறார். ஆனாலும், பல பகுதிகளில் சாலைகள் குண்டும், குழியுமாக இருப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுகின்றன. இந்நிலையில், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய கட்கரி, 'சாலைகள் சில இடங்களில் மோசமாக இருப்பதாக புகார்கள் வருகின்றன. இதற்கு என்னை மட்டுமே குறை கூறுவது சரியாக இருக்காது . 'இனிமேல், ஒவ்வொரு நெடுஞ்சாலையிலும், அந்த சாலை பணியை மேற்கொண்ட ஒப்பந்த நிறுவனத்தின் பெயர், அதற்கு பொறுப்பேற்றிருந்த அதிகாரிகளின் பெயர்கள் உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய தகவல் பலகையை வைக்க உத்தரவிட்டுள்ளேன். இதன் வாயிலாக என் மீதான பழிச்சொல் குறையும்...' என்றார். 'மிக அழகாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் இந்த பிரச்னையில் கோர்த்து விட்டு, அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி என்பதை நிரூபித்து விட்டார்...' என, பா.ஜ.,வினர் கட்கரியை பாராட்டுகின்றனர்.
10-Nov-2025