உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் /  செல்வாக்கு இல்லையா?

 செல்வாக்கு இல்லையா?

'எங்கள் கட்சியில் அகிலேஷ் யாதவுக்கு அடுத்ததாக, அவரது மனைவி டிம்பிள் யாதவை முன்னிலைப்படுத்தும் நடவடிக்கைகளை துவங்கி உள்ளோம்...' என, பெருமிதத்துடன் கூறுகின்றனர், சமாஜ்வாதி கட்சி நிர்வாகிகள். உத்தர பிரதேச மாநிலத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. தொடர்ச்சியாக, இரண்டு சட்டசபைத் தேர்தல்களில் பா.ஜ.,வே இங்கு வெற்றி பெற்று வருகிறது. அடுத்தாண்டு துவக்கத்தில், இங்கு சட்டசபைத் தேர்தல் நடக்கவுள்ளது. இதில் எப்படியாவது வெற்றி பெற்று, ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முடிவுடன், சமாஜ்வாதி கட்சி நிர்வாகிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். ஆனாலும், 'சமாஜ்வாதி கட்சித் தலைவரும், உ.பி., முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவுக்கு, இளம் தலைமுறையினரை ஈர்க்கும் திறன் இல்லை' என்ற பேச்சு பரவலாக உள்ளது. இதனால், அகிலேஷின் மனைவியும், உ.பி.,யில் உள்ள மெயின்புரி லோக்சபா தொகுதி எம்.பி.,யுமான டிம்பிள் யாதவை களத்தில் இறக்கி விட்டுள்ளனர். 'நீட்' வினாத்தாள் கசிவு முறைகேடு தொடர்பாக, சமீபத்தில் டில்லியில் நடந்த மாணவர்கள் போராட்டத்தில் டிம்பிள் யாதவும் பங்கேற்றார். பார்லிமென்ட் வளாகத்தில் இருந்து, போராட்டம் நடந்த ஜந்தர் மந்தர் பகுதி வரை, தன் கட்சியினருடன் ஊர்வலமாக வந்தார். இதைப் பார்த்த, உ.பி., மாநில பா.ஜ.,வினர், 'அகிலேஷ் யாதவுக்கு மக்கள் செல்வாக்கு இல்லை என்பதை, சமாஜ்வாதி கட்சியினரே ஏற்றுக் கொள்கின்றனர்...' என, கிண்டல் அடிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை