உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் / பெயரளவுக்கு பிரசாரம்!

பெயரளவுக்கு பிரசாரம்!

'இடைத்தேர்தலில் காட்டிய தீவிரத்தை, சட்டசபை தேர்தலுக்கும் காட்டியிருந்தால், இவ்வளவு அவமானம் தேவையில்லை...' என, கட்சியின் மேலிட தலைவர்களை நினைத்து புலம்புகின்றனர், காங்கிரஸ் தொண்டர்கள்.கேரள மாநிலம், வயநாடு லோக்சபா தொகுதிக்கு சமீபத்தில்இடைத்தேர்தல் நடந்தது.இதில், காங்கிரஸ் சார்பில், கட்சியின் பொதுச்செயலர் பிரியங்கா போட்டியிட்டார்.அவருக்கு ஆதரவாக,அவரது சகோதரர் ராகுல்,காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட ஒட்டுமொத்த காங்., தலைவர்கள், நிர்வாகிகள் வயநாடு தொகுதியில் முகாமிட்டு, வீதி வீதியாக பிரசாரம் செய்தனர் எதிர்பார்த்தது போலவே தேர்தலில்,3 லட்சத்துக்கும் அதிகமான ஓட்டுகள் வித்தியாசத்தில் பிரியங்கா வெற்றி பெற்றார்.அதே நேரத்தில், மஹாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் காங்., தலைவர்கள் ஆர்வம் காட்டவில்லை. இங்கு, 16 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. 'ஒரு தேசிய கட்சிக்கு இது மிகப்பெரிய அவமானம்...' என, கட்சி தொண்டர்கள்கண்ணீர் வடிக்கின்றனர்.'வயநாடு தொகுதி பிரசாரத்தில் காட்டிய ஆர்வத்தில், 50 சதவீதமாவது மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலிலும் ராகுல் காட்டியிருக்கலாம். பெயரளவுக்கு பிரசாரம் செய்ததால், இப்படிப்பட்ட மோசமான தோல்வியை சந்தித்து விட்டோம்...' என, காங்கிரஸ் தொண்டர்கள் கதறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ