உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் /  இது வேலைக்கு ஆகாது!

 இது வேலைக்கு ஆகாது!

'கட்சி உருப்படுவதற்கான வாய்ப்பே இல்லை...' என, கொந்தளிப்புடன் பேசுகின்றனர், திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும். மேற்கு வங்கத்தில், முதல்வர் சுவேந்து அதிகாரி தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, மூன்று முறை ஆட்சியில் இருந்த மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ் கட்சியை, பா.ஜ., வீழ்த்தி ஆட்சியை பிடித்தது. இந்த தோல்விக்கு பின்னும், மம்தாவை துரதிர்ஷ்டம் துரத்துகிறது. திரிணமுல் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற 80 எம்.எல்.ஏ.,க்களில், 70 பேர், மம்தாவை விட்டு பிரிந்து தனித்து செயல்படுகின்றனர். 'கட்சியின் இந்த வீழ்ச்சிக்கு, மம்தாவின் மருமகனும், லோக்சபா எம்.பி.,யுமான அபிஷேக் பானர்ஜி தான் காரணம்' என, அந்த கட்சியின் ஒட்டுமொத்த நிர்வாகிகளும் குற்றம்சாட்டுகின்றனர். 'அபிஷேக், மம்தாவின் விசுவாசிகளை ஓரம்கட்டி விட்டு, தனக்கு ஜால்ரா அடிப்பவர்களுக்கு கட்சியில் முக்கியத்துவம் அளித்தார். இதனால், கட்சியில் கோஷ்டி பூசல் ஏற்பட்டு, தேர்தல் தோல்விக்கு வழிவகுத்து விட்டது...' என புலம்புகின்றனர், திரிணமுல் காங்கிரஸ் நிர்வாகிகள். இதையடுத்து, அபிஷேக் மீது மம்தா நடவடிக்கை எடுப்பார் என, கட்சியினர் எதிர்பார்த்தனர். ஆனால், அவரை மீண்டும் திரிணமுல் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலராக நியமித்துள்ளார் மம்தா. திரிணமுல் கட்சி தொண்டர்களோ, 'ம்ஹூம்; இது வேலைக்கு ஆகாது...' என புலம்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை