வாசகர்கள் கருத்துகள் ( 1 )
டெல்லியில் கெஜரிவால்.. தெலுங்கானாவில் ஒய் எஸ் ஆர். ஆகயெல்லோரும் வாய்ப்பு கிடைத்தால் அரசு பணத்தை சூறையாட ரெடியாதான்யிருக்காங்க.
'பொதுவாக, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும்; அப்போது தான், ஏற்கனவே ஆட்சியில் இருந்தவர்கள் என்ன தவறு செய்தனர் என தெரியும்...' என்கின்றனர், ஆந்திர மக்கள்.இங்கு, முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி நடக்கிறது. இதற்கு முன், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன்ரெட்டி முதல்வராக இருந்தார். சந்திரபாபு நாயுடு முதல்வர் நாற்காலியில் அமர்ந்ததும், முந்தைய ஆட்சியில் நடந்த முறைகேடுகள் குறித்த பட்டியலை தயாரிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அந்த பட்டியலில் உள்ள ஒரு விஷயத்தை பார்த்ததும், சந்திரபாபு நாயுடுவுக்கு தலை சுற்றி விட்டது. விசாகப்பட்டினம் கடற்கரை அருகே, 451 கோடி ரூபாய் செலவில், அரண்மனை போன்ற பிரமாண்டபங்களா கட்டப்பட்டுள்ளது தெரியவந்தது.முதல்வர் ஓய்வெடுப்பதற்காக கட்டப்பட்ட பங்களாஇது. இங்குள்ள குளியல் அறை மட்டுமே, 36 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது.ஒவ்வொரு அறையும் பல லட்சம் ரூபாய் செலவில், பார்த்து பார்த்து வடிவமைக்கப்பட்டுள்ளது.'முதல்வர் ஓய்வெடுப்பதற்கு, எதற்கு இவ்வளவு பணத்தை செலவழித்து பங்களா கட்ட வேண்டும். மக்களின் வரிப்பணத்தை ஏன் வீணடித்தனர்...' என, ஆவேசப்பட்ட சந்திரபாபு நாயுடு, இது குறித்து விசாரணை நடத்தும்படி போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.'இந்த வழக்கில், ஜெகன்மோகன் ரெட்டி விரைவில்ஜெயிலுக்கு போய் விடுவார் போலிருக்கிறது...' என்கின்றனர், ஆந்திர மக்கள்.
டெல்லியில் கெஜரிவால்.. தெலுங்கானாவில் ஒய் எஸ் ஆர். ஆகயெல்லோரும் வாய்ப்பு கிடைத்தால் அரசு பணத்தை சூறையாட ரெடியாதான்யிருக்காங்க.