அறிவியல் ஆயிரம்
இலைகளின் தனித்துவம்
கடும் வெயிலில் உலோகத்தையோ காகிதத்தையோ வைத்தால் விரைவில் சூடாகி விடுகிறது. ஆனால் சூரிய ஒளியில் நேரடியாக எவ்வளவு நேரம் இருந்தாலும் தாவர இலைகள் சூடாகுவதில்லை. இதற்கு காரணம் தாவர இலைகள் பல அடுக்கு செல்களால் ஆனவை. இதில் கீழ், மேல் வழியாக 'ஸ்டோமெட்டா' எனும் துளைகள் உள்ளன. இந்த இலைத்துளைகள் மூலமாக வாயு பரிமாற்றம் நடக்கின்றன. இதில் எப்போதும் ஓரளவு நீர் தொடர்ந்து ஆவியாகிக் கொண்டே இருக்கும். இதனால் வெப்பம் கடத்தப்படுவதால், இலை சூடாகாமல் குளிர்ச்சியாகவே இருக்கின்றன.