அறிவியல் ஆயிரம்
மெதுவாக செல்லும் உயிரினம்மெதுவாக செல்லும் உயிரினங்களில் ஒன்று ஆமை. இதன் முதுகுப்பகுதியில் கடினமான ஓடு பிணைந்திருப்பதால் வேகமாக செல்ல முடியாது. மேலும் இதன் கால்கள் வேகமாக ஓடும் வகையில் அமைக்கப்படவில்லை. இருப்பினும் தரையை விட நீரில் வேகமாக செல்லும் திறன் பெற்றது. பெரும்பாலான நிலவாழ் ஆமைகளின் உணவாக புல், இலை, பூ, பழம் உள்ளன. எதிரிகளைக் கண்டவுடன் தலை, கால்களை ஓட்டுக்குள் இழுத்துக்கொள்வதால் தப்பி ஓட வேண்டிய அவசியமும் இல்லை. இதில் பல வகைகள் உள்ளன. இதற்கேற்ப அதன் எடை, ஆயுட்காலம், அளவு மாறுபடுகிறது.