அறிவியல் ஆயிரம்
எண்ணெய் வளம் எங்கு அதிகம்பூமிக்கடியில் பாறை அடுக்கில் இயற்கையாகக் கிடைக்கும் சுத்திகரிக்கப்படாத திரவ ஹைட்ரோகார்பன்கலவை தான், கச்சா எண்ணெய். உலகில் நிரூபிக்கப்பட்ட வகையில் அதிக கச்சா எண்ணெய் இருப்பை (30 ஆயிரம் கோடி பேரல்) வைத்துள்ள நாடு வெனிசுலா. இது உலகின் மொத்த இருப்பில் 17 சதவீதம். அந்நாடு 1990ல் ஒரு நாளைக்கு 37 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி (தற்போது 10 லட்சம் பேரல்) செய்தது. கச்சா எண்ணெய் உற்பத்தியில் 'டாப்-3' இடத்தில் அமெரிக்கா (ஒரு நாளைக்கு 2.2 கோடி பேரல்), சவுதி (1.10 கோடி), ரஷ்யா (1.08 கோடி) உள்ளன.