அறிவியல் ஆயிரம்
பனியில் பாறைஅண்டார்டிகாவில் ஆய்வு நடத்திய சர்வதேச விஞ்ஞானிகள் குழு, 748 அடி ஆழத்தில் பழமையான பாறை, ஈர மண்ணை எடுத்துள்ளனர். இது மேற்கு அண்டார்டிகாபனிப்பாறையில் அதிக ஆழத்தில் எடுக்கப்பட்ட பாறை. வெப்பநிலை உயர்வால் இப்பகுதி பனிப்பாறை எந்தளவுக்கு பாதிக்கிறது என்பதை ஆய்வு செய்வதே இத்திட்டத்தின் நோக்கம். இப்பாறை, 2.3 கோடி ஆண்டுகள் பழமையானது. உலகின் நன்னீரில் பெரும்பாலானவை அண்டார்டிகா பனிப்பாறையில் தான் உள்ளது. மேற்கு அண்டார்டிகா பனிப்பாறை மட்டும் உருகினாலே, உலகில் கடல்நீர்மட்டம் 16 அடி உயரும் ஆபத்துள்ளது.