மிதக்கும் சோலார் நிலையம்
சிங்கப்பூர் சிறிய நிலப்பகுதியை கொண்ட நாடு. ஆனால் சூரிய ஒளி பரவலாக கிடைக்கும் கால நிலையை கொண்டது. அதனால் நீர்நிலைகளில் இருந்து சோலார் மின்சார உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. இதன்படி 45 ஹெக்டேர் பரப்பளவிலான தெங்கே நீர்தேக்கத்தில் 1,22,000 சோலார் பேனல்களை நிறுவி, 10 மிதக்கும் தீவு போல மாற்றியுள்ளது. இதிலிருந்து 60 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யப்படுகிறது. இதன்மூலம் ஆண்டுக்கு 32 ஆயிரம் டன் கார்பன் டை ஆக்சைடு வெளியீட்டையும் குறைத்துள்ளது. இது அந்நாட்டு சாலைகளில் இருந்து 7000 கார்களை குறைத்ததற்கு சமம்.