பழமையான பற்கள்
சுறா மீன் என்றால் பயப்படாதவர்களே இருக்க முடியாது. ஏனெனில் இது சாதாரணமாக மனிதர்களை தாக்கி இரையாக்கி விடும். சுறா மீன்களுக்கு அதன் ஆயுட்காலம் முழுவதும் பற்கள் முளைத்துக்கொண்டே இருக்கும். சுறா மீன் வேகமாக நீந்தும் மீன் இனங்களில் ஒன்று. இவை கூர்மையான பற்களைக் கொண்டுள்ளன. இந்நிலையில் மெக்சிகோ வளைகுடாவில், நீருக்கு அடியில், 25 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய சுறா மீனின் 15 பற்களின் படிமங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதில் 13 பற்கள் சுறா மீனின் சில இனங்களைச் சேர்ந்தது.