அறிவியல் ஆயிரம் : செவ்வாயில் உயிரினங்கள்
அறிவியல் ஆயிரம்செவ்வாயில் உயிரினங்கள்அமெரிக்க விண்வெளி மையம் 'நாசா', செவ்வாய் கோளை ஆய்வுசெய்யும் விதமாக 2020ல் 'பெர்சிவிரன்ஸ்' ரோவரை அனுப்பியது. இது சமீபத்தில் செவ்வாய் கோளில் உள்ள பாறைகளில் கார்பன் மூலக்கூறுகள் இருப்பதை கண்டுபிடித்துள்ளது. இது செவ்வாயில் ஒரு காலத்தில் உயிரினங்கள் வாழ்ந்திருக்கலாம் என்பதற்கு வலு சேர்க்கிறது என ஆய்வு தெரிவித்துள்ளது. இது குறித்து கூடுதலான விவரங்களை சேகரிப்பதற்கு, அந்த செவ்வாய் பாறையில் இருந்து அதன் கற்கள், துகள் மாதிரியை பூமிக்கு கொண்டு வந்து, விரிவான ஆய்வு செய்ய வேண்டும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.