அறிவியல் ஆயிரம் நிறம் மாறும் மீன்
அறிவியல் ஆயிரம்நிறம் மாறும் மீன்'கனவாய்' மீனின் இதயம் பார்க்க பெரிதாக ஒரே இதயமாகத் தோன்றும். ஆனால் மூன்று இதயங்கள் உள்ளன. இதில் இரண்டு செவுள்களுக்கும், மூன்றாவது இதயம் பிற உறுப்புகளுக்கு ரத்தத்தை கொண்டு செல்லும். இதன் உடல் தட்டையாக இருப்பதால் கடலில் வாழ்வதற்கு ஏற்றதாக உள்ளது. இவை சிறிய மீன்களை உண்ணும். பிற உயிர்களிடம் இருந்து தன்னை பாதுகாக்க பச்சோந்தி போலத் தன் நிறத்தைப் பின்புல நிறத்திற்கு ஏற்ப மாற்றும் இயல்புடையது. இதற்காக கறுப்பு நிறத் திரவத்தை வெளியிடும். அது தண்ணீரில் கலந்தவுடன் தற்காலிகமாகத் தப்பிக்கும்.