அறிவியல் ஆயிரம் : வீணாகும் உணவிலிருந்து எரிபொருள்
அறிவியல் ஆயிரம்வீணாகும் உணவிலிருந்து எரிபொருள்உலகில் உற்பத்தியாகும் உணவுகளில் வயல், தானிய கிடங்கு, வீடுகளில் இருந்து ஆண்டுக்கு 30 சதவீத உணவு வீணடிக்கப்படுகிறது. இவை நிலம், நீர்நிலைகளில் சேர்ந்து சிதைவடையும் போது பசுமை இல்ல வாயுக்களை வெளியிடுவதால் பருவநிலை பாதிக்கப்படுகிறது. இந்நிலையில் உணவு குப்பைகளில் இருந்து விமானங்களுக்கான எரிபொருள் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை அமெரிக்காவின் இலினாய்ஸ் பல்கலை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். இது விமானத் துறை, 2050க்குள் 'பூஜ்ய கார்பன் வெளியீடு' இலக்கை அடைய உதவும் என தெரிவித்துள்ளனர்.