அறிவியல் ஆயிரம் : உப்பு கூடினால் தப்பா...
அறிவியல் ஆயிரம்உப்பு கூடினால் தப்பா...இந்தியர்கள் தினமும் 9 - 11 கிராம் அளவுக்கு உப்பு எடுத்துக்கொள்கின்றனர். இது உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரை அளவை விட இரு மடங்கு அதிகம் என ஆய்வு தெரிவித்துள்ளது. உப்பு அதிகம் பயன்படுத்துவதால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இதன்காரணமாக இந்தியாவில் ஆண்டுக்கு 1.75 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். மேலும் 22 கோடி பேர் இதய பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதற்கும் வழி வகுத்துள்ளது. உப்பு பயன்பாட்டை குறைப்பது, இதய பாதிப்பு, பக்கவாதம் உள்ளிட்ட பாதிப்புகளில் இருந்து நம்மை பாதுகாக்கும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.