உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம்பிளாஸ்டிக்கின் அபாயம்தவிர்க்க முடியாத அளவில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து விட்டது. இதனால் நிலம், நீர், ஆகாயம் என மொத்த பூமியே பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது இதை தயாரித்த மனிதனையும் இது பாதிக்கத்தொடங்கியுள்ளது. நானோ பிளாஸ்டிக் நுண் துகள்கள் மனித உடலுக்குள்ளும் நுழைந்தது, விஞ்ஞானிகளின் ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரத்தம், ஆக்சிஜனை மூளைக்கு எடுத்துச்செல்லும் ரத்த குழாய்களில் பிளாஸ்டிக் நுண் துகள் சேர்வது, மாரடைப்பு, பக்கவாதம், புற்றுநோய் ஏற்படுவதற்கு காரணமாகிறது என பிரிட்டன் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தகவல் சுரங்கம்உலக அழகி வரலாறுஉலக அழகி போட்டிகள் 1951 முதல் ஆண்டுதோறும் நடக்கிறது. இந்தியாவை சேர்ந்த ஐந்து பேர் இப்பட்டம் வென்றுள்ளனர். பிரிட்டன் தலைநகர் லண்டனில் நடந்த முதல் போட்டியில் சுவீடனின் கிகி ஹாகன்சன் பட்டம் வென்றார். 1988 வரை தொடர்ந்து 37 ஆண்டுகள் லண்டனில் மட்டுமே நடந்த இப்போட்டி, 1989ல் ஹாங்காங்கில் நடந்தது. பின் அமெரிக்காவின் அட்லாண்டா, தென் ஆப்ரிக்காவின் சன் சிட்டியில் நடந்தது. 1996ல் இந்தியாவில் (பெங்களூரு) முதன்முறையாக நடைபெற்றது. இரண்டாவது முறையாக மும்பையில் சமீபத்தில் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !