அறிவியல் ஆயிரம் : செவ்வாயில் நகரம்
அறிவியல் ஆயிரம்செவ்வாயில் நகரம்'சிவப்பு கோள்' என அழைக்கப்படும் செவ்வாயில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு உள்ளதா என பல நாடுகளும் ஆய்வில் ஈடுபட்டுள்ளன. இந் நிலையில் அடுத்த இரண்டு ஆண்டுக்குள் செவ்வாயில் தரையிறக்கும் விதமாக ஐந்து ஆளில்லா 'ஸ்டார்ஷிப்' விண்கலம் அனுப்ப, அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஏழு ஆண்டுகளுக்குள் செவ்வாய்க்கு மனிதர்களுடன் விண்கலம் அனுப்பவும் திட்டமிட்டு உள்ளது. அடுத்த 20 ஆண்டுக்குள் செவ்வாயில் தன்னிறைவு பெற்ற நகரத்தை உருவாக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.