அறிவியல் ஆயிரம் : வேகமாக மூழ்கும் நகரம்
அறிவியல் ஆயிரம்வேகமாக மூழ்கும் நகரம்கடல் நீர்மட்டம் உயர்வால் லட்சக்கணக்கான மக்கள் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள நிலையில், இது மேலும் அதிகரிக்கிறது என ஜெர்மனியின் முனிச் தொழில்நுட்ப பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது. இதன்படி வேகமாக மூழ்கும் நகரங்களில் இந்தோனேஷியாவின் ஜகார்தா, முதலிடத்தில் உள்ளது. அங்கு ஆண்டுக்கு 13.7 மி.மீ., அளவில் கடல் நீர்மட்டம் உயர்கிறது. அடுத்து சீனாவின் டியான்ஜின் (1.5 மி.மீ.,), தாய்லாந்தின் பாங்காக் (8.5 மி.மீ.,) உள்ளன. பருவநிலை மாற்றம், வெப்பமயமாதலால் உருகும் பனி ஆறுகள், வெப்ப நீரின் விரிவாக்கம் ஆகியவை கடல் நீர்மட்டம் உயர்வுக்கு காரணமாகிறது.