| ADDED : ஜூன் 07, 2024 09:41 PM
அறிவியல் ஆயிரம்அமெரிக்காவின் அணு ஏவுகணைகண்டம் விட்டு கண்டம் பாயும் ஹைபர்சோனிக் அணு ஏவுகணையை அமெரிக்க ராணுவம் வெற்றிகரமாக சோதித்தது. ஏவுகணையின் உயரம் 60 அடி. விட்டம் 5.3அடி. எடை 36ஆயிரம் கிலோ. சோதனை முயற்சியில் கலிபோர்னியாவில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை மத்திய பசிபிக் கடலில் உள்ள மார்ெஷல் தீவு வரை 6500 கி.மீ., துாரம் சென்றது. மணிக்கு 24 ஆயிரம் கி.மீ., வேகத்தில் செல்லும் திறன் பெற்றது. சீனா, ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடும் விதமாக உள்ளது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கலிபோர்னியாவில் இருந்து ரஷ்யா 9400 கி.மீ., சீனா 9650 கி.மீ., துாரத்தில் உள்ளது.தகவல் சுரங்கம்உலக பெருங்கடல் தினம்பூமியின் மொத்த ஆக்சிஜனில் 50 சதவீதம் கடல் மூலம் கிடைக்கிறது. பல வழிகளிலும் நன்மை அளிக்கும் கடல், கடல்சார் உயிரினங்களை பாதுகாக்க ஜூன் 8ல் உலக பெருங்கடல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'ஒரே கடல், ஒரே காலநிலை, ஒரே எதிர்காலம் - இணைவோம்' என்பது இந்தாண்டு மையக்கருத்து. *மூளையின் எந்தப் பகுதியிலும் அசாதாரண செல்கள் உருவாகும்போது மூளைக் கட்டி பாதிப்பு ஏற்படுகிறது. இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த ஜூன் 8ல் உலக மூளைக் கட்டி தினம் கடைபிடிக்கப்படுகிறது.