அறிவியல் ஆயிரம்: செவ்வாயில் பெரிய கடல்
'சிவப்பு கோள்' எனும் செவ்வாயில் விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக ஆய்வு செய்கின்றனர். இந்நிலையில் 30 லட்சம் ஆண்டுகளுக்கு முன், செவ்வாய் கோளின் பாதி அளவுக்கு, கடல் இருந்தது. இது பூமியிலுள்ள ஆர்க்டிக் பெருங்கடல் போல இருந்தது. அதனால் இது எப்போதும் துாசி, வறண்ட கிரகமாக இருந்ததில்லை என சுவிட்சர்லாந்து பெர்ன் பல்கலை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். ஏற்கனவே சில ஆய்வில் கடல் இருப்பது கண்டறியப்பட்டாலும், நாங்கள் துல்லிய ஆய்வுகளுடன் கண்டுபிடித்துள்ளோம். இது (கடல்) செவ்வாயின் வடக்கு அரைக்கோளத்தில் இருந்தது என தெரிவித்துள்ளனர்.