அறிவியல் ஆயிரம்: 30 நாளில் செவ்வாய்...
அறிவியல் ஆயிரம்30 நாளில் செவ்வாய்...எதிர்காலத்தில் நிலவு, செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பும் ஆராய்ச்சிகள் நடக்கின்றன. தற்போதைய தொழில்நுட்பத்தில் பூமியில் இருந்து செவ்வாய் செல்ல சில மாதங்கள் ஆகும். இந்நிலையில் செவ்வாய்க்கு விரைவாக செல்ல 'பிளாஸ்மா ராக்கெட் இன்ஜின்' தொழில்நுட்பத்தை ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். இதில் எரிபொருள் எரிப்புக்கு பதிலாக மின்காந்த புலங்களை பயன்படுத்தியுள்ளனர். இதனால் பூமியில் இருந்து செவ்வாய் கிரகத்துக்கு 30 நாட்களில் செல்ல முடியும் என தெரிவித்துள்ளனர். இதை ரஷ்யாவின் அணுசக்தி கழகம் தயாரித்துள்ளது.