அறிவியல் ஆயிரம்: பெரிய வெள்ளம்
அறிவியல் ஆயிரம்பெரிய வெள்ளம்பூமியின் மிகப்பெரிய வெள்ளம் 50 லட்சம் ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்டது. இது அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்து தண்ணீரை, ஜிப்ரால்டர் நீரீணை வழியாக, மத்திய தரைக்கடலில் நிரப்பியது. அதற்கு முன்பு வரை மத்திய தரைக்கடலில் தண்ணீரே இருந்ததில்லை என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வெள்ளத்தால் உருவான தண்ணீர் என்பது, தற்போது அமேசான் ஆற்றில் செல்லும் தண்ணீரை விட, 1000 மடங்கு அதிகமாக இருந்தது. இருப்பினும் இந்த ஆய்வு முடிவை, அனைத்து ஆராய்ச்சியாளர்களும் ஏற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.