அறிவியல் ஆயிரம் : காணாமல் போன பனிப்பாறை
அறிவியல் ஆயிரம்காணாமல் போன பனிப்பாறைஉலகின் பெரிய பனிப்பாறை (ஏ23ஏ) 40 ஆண்டுக்குப்பின் தற்போது மறைந்து விட்டது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதன் பரப்பளவு 3500 சதுர கி.மீ. 920 அடி. எடை ஒரு லட்சம் கோடி டன். அண்டார்டிகாவில் 'பில்ச்னர்'பனிப்பாறையிலிருந்து 1986ல் முதன்முதலில் உடைந்து பிரிந்தது. 40 ஆண்டாக இதன் நகர்வை விஞ்ஞானிகள் கண்காணித்தனர். பருவநிலை மாற்றம், வெப்பநிலை உயர்வு உள்ளிட்டவையால் இதன் பெரும்பாலான பகுதி உடைந்து, உருகி வந்தது. கடைசியாக 2026 ஏப்ரலில் கண்டறியப்பட்டது. தற்போது செயற்கைக்கோள் பார்வையில் இருந்து முழுதும் மறைந்து விட்டது.