அறிவியல் ஆயிரம்
பூமிக்கு தண்ணீர் வந்தது எப்படி
பூமி, 460 கோடி ஆண்டுக்கு முன் உருவான போது வெப்பமான கிரகமாக இருந்தது, தற்போதைய பெருங்கடலில் உருகிய பாறைக்குழம்பு (மாக்மா) தான் பாய்ந்தது. எனில் தண்ணீர் எங்கே இருந்தது என்ற கேள்விக்கு விஞ்ஞானிகள் ஆய்வில், தண்ணீர் பூமியின் ஆழமான அடுக்கில் கனிமங்களுக்குள் மறைந்திருந்தது என கண்டுபிடித்துள்ளனர். பின் லட்சக்கணக்கான ஆண்டுகளில் பூமி, வெப்பமான நிலையில் இருந்து குளிர்ந்து திடமான கிரகமாக மாறியது. பூமியின் ஆழத்தில் இருந்த தண்ணீர், மேல்நோக்கி பெருங்கடலில் நிரம்பின என ஆய்வில் தெரிவித்துள்ளனர்.