உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தினமலர் பவள விழா / பெருந்தன்மைக்கு மற்றொரு சொல் தினமலர்

பெருந்தன்மைக்கு மற்றொரு சொல் தினமலர்

'தி ஹிந்து' ஆங்கில தினசரி, கடந்த 2003ல் தன் 125வது பிறந்த நாளை கொண்டாடியது. அதன் வளர்ச்சி, சாதனைகளை பற்றி, 'தினமலர்' நாளிதழில் விரிவான கட்டுரை எழுத வேண்டும் என்று, அப்போதைய ஆசிரியர் இராகிருஷ்ணமூர்த்தி விரும்பினர். அதற்காக, 'தி ஹிந்துவின் முதலாளிகளில் என்.ராம் மற்றும் என்முரளியை இரண்டு மணி நேரம் பேட்டி கண்டு எழுதினேன். ஆசிரியர், மீண்டும் 'தி ஹிந்து' அலுவலகத்திற்கு போகச் சொன்னார். மற்றொரு முதலாளியான என்.ரவியையும் பேட்டி காண செய்தார். அந்த பேட்டிகள், 'தினமலர் நாளிதழில் ஒன்றரை பக்கத்திற்கு கட்டுரையாக பிரசுரமானது.தொடர்ந்து, 'தி ஹிந்து' குழுமம், 125வது ஆண்டை கொண்டாடுவதற்காக, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் விழா எடுத்தது. அப்போதைய பாரத பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் வந்து விழாவை சிறப்பித்தார்.அங்கு வந்திருந்த 'தினந்தந்தி' அதிபர் சிவந்தி ஆதித்தன், என்னை சந்தித்து. 'தி ஹிந்து பற்றி நீங்கள் எழுதிய கட்டுரையை முழுமையாக படித்தேன் சிறப்பாக எழுதி இருந்தீர்கள். ஒரு பத்திரிகை மற்றொரு பத்திரிக்கையின் சாதனைகளை பற்றி பாராட்டி எழுதுவது என்பது, தினமலர் நிர்வாகத்தின் பெருந்தன்மையை காட்டுகிறது. உங்கள் ஆசிரியரிடம் என் பாராட்டுகளை தெரிவியுங்கள்' என்றார்.பெருந்தன்மைக்கு மற்றொரு சொல் 'தினமலர்' என்றால் அது மிகையாகாது.என் 50 ஆண்டு பத்திரிகை அனுபவத்தில், ஜெயலலிதா, ரஜினி, கமல் போன்ற ஆளுமைகளுடன் பேட்டி தொடர்கள் உட்பட 2000 நேர்காணல்களை எடுத்து எழுதும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. 'தினமலர்' குழுமத்தின் அப்போதைய பொறுப்பாசிரியரும் தற்போதைய ஆசிரியருமான கி.ராமசுப்பு என்னை ஊக்குவித்து எனக்கு அளித்த வாய்ப்புகள் தான் என் வளர்ச்சிக்கு காரணம். அதற்கு ஓர் உதாரணம். மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். பற்றி தொடர் எழுத எனக்கு கிடைத்த வாய்ப்பு.எம்ஜி.ஆர், பற்றிய சுவையான தகவல்கள், அவரது மெய்க்காப்பாளராக இருந்த கே.பி.ராமகிருஷ்ணன் என்பவரிடம் கிடைக்கும் என்று அறிந்து, அவரை சந்தித்தேன் பின், பத்து விஷயங்களை ஒரு ஏ4 முழு தாளில் எழுதி பொறுப்பாசிரியருக்கு அனுப்பினேன்.இரு நிமிடங்களில், அவருடைய உதவியாளர், அந்த தாளை திருப்பிக் கொடுத்தார். அதில் 'எம்.ஜி.ஆர், 50 வாரங்கள்' என்று எழுதி, பொறுப்பாசிரியர் கையெழுத்திட்டு இருந்தார். 50 வாரங்கள், வாரம் இரு பக்கம் வரவேண்டிய விஷயத்தை, இரு நிமிடங்களில் முடிவு செய்தார்! அப்படி வேகமாக முடிவெடுக்கும் ஆசிரியரை வாழ்நாளில் நான் கண்டதில்லை!அப்படித்தான் இரண்டு நிமிடங்களில் பிறந்தது, 'எம்.ஜி.ஆர். ஒரு சகாப்தம்' என்ற தொடர் அது. 'வாரமலர் இதழில் வந்து கொண்டிருந்த சமயம் ஆனந்த விகடன்' ஆசிரியர் குழுவிலிருந்து என்னை தொடர்பு கொண்டு, 'எம்.ஜி.ஆர். ஒரு சகாப்தம் தொடனர் புத்தகமாக விகடன் பிரசுரம் வெளியிட விரும்புவதாக கூறினர்.இதை, 'தினமலர்' பொறுப்பாசிரியர் எப்படி எடுத்துக்கொள்வார் என்ற ஐயம் எனக்கு இருந்தது. என் ஐயத்திற்கு மாறாக, அவர் மகிழ்ச்சி அடைந்தார். காரணம் அதுவரை விகடன். ஜூனியர் விகடன் இரண்டிலும் வரும் கதை, கட்டுரைகளை மட்டுமே விகடன் பிரசுரம் புத்தகங்களாக வெளியிட்டு வந்தது. வேறு பத்திரிகைகளில் வரும் கட்டுரையை புத்தகமாக போடுவது அது தான் முதல் முறை நினமலர் பொறுப்பாசிரியர் அணிந்துரையுடன், எம்.ஜி.ஆர். ஒரு சகாப்தம் புத்தகமாக வெளியானது மட்டுமல்ல, இதுவரை 3 பதிப்புகள் வெளியாகி சாதனை படைத்துள்ளது என்பதற்கு தொடக்கப்புள்ளி இரண்டு நிமிடங்களில் எடுக்கப்பட்ட முடிவுஎழுத்தாளர்கள், பத்திரிகையாளர்களுக்கு உதவி செய்வதில் 'தினமலர்' ஆசிரியர் கி.ராமசுப்புவுக்கு நிகர் யாருமில்லை அதே போல், கதைகள் கட்டுரைகளுக்கு ஆசிரியருக்கு வரும் விமர்சன கடிதங்களை நகல் எடுத்து எழுத்தாளர்களுக்கு அனுப்பி, அவர்களை மகிழ்விப்பது 'தினமலர்' மட்டுமே. பல நூற்றுக்கணக்கான வாசகர் கடிதங்களை இன்றும் பொக்கிஷமாக நான் பாதுகாத்து வருகிறேன்.பத்திரிகை ஆசிரியர்கள், பத்திரிகையை நேசிப்பர் ஆனால், 'தினமலர்' நிறுவனர் டி.வி.ஆர். முதல் இப்போதுள்ள ஆசிரியர் வரை பத்திரிகையை சுவாசித்தனர். சுவாசிக்கின்றனர். அதனால் தான் 'தினமலர்' நாளிதழ் அகர வளர்ச்சி அடைந்து, தனி செல்வாக்குடன் விளங்குகிறது.இன்று, எட்டு ரூபாய்க்கு ஒரு கப் டீ கூட கிடைப்பதில்லை, எட்டு ரூபாய் விலையில், எளிய தமிழில், எவ்வளவு தகவல்கள். அவ்வளவும் கடச்சுட நம் வீட்டு வாசலுக்கே வருகிறது. இது மகத்தான சலுகை மட்டும் அல்ல வாய்ப்பும் இல்லையா?தமிழர்கள் வாழ்வில் இன்றியமையாத அங்கமாக ஜொலிக்கும் தினமலர் உண்மையின் உரைகல்லாக தொடர வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.அன்புடன்எஸ்.ரஜத்மூத்த பத்திரிகையாளர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை