மேலும் செய்திகள்
கல்வியாளர்களின் கலங்கரை விளக்கு 'தினமலர்'
11-Apr-2026
திருப்பூரில் 48 ஆண்டுகளாக வீட்டு உபயோகப் பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், பர்னிச்சர் பொருட்கள் விற்பனை செய்து வருகிறோம். 'தினமலர்' நாளிதழுடனான எங்களது உறவு, 50 ஆண்டுகளுக்கு மேலானது. அதேநேரம், 33 ஆண்டுகளாக தினமலர் நாளிதழுடன் விளம்பர வியாபார தொடர்பு அலாதியானது. வாசகனாக தினமலரை முதன்முதலாக தொட்ட நாள் முதல் இன்று வரை என்னுள் இருந்து கொண்டிருக்கும் பெருமிதத்தை வார்த்தைகளில் வர்ணிக்க இயலாது. ஆட்சிகள், காட்சிகள் எது மாறிப்போனாலும் தினமலரின் நடுநிலைமை மட்டும் என்றும் எப்பக்கமும் சாய்ந்ததில்லை. மக்களின் பிரச்னைகள், இயற்கைக்கு ஒரு பிரச்னை என எது வந்தாலும் பாதிக்கப்பட்டோருக்காக எழும்பும் முதல் குரலாய் தினமலரை பார்த்து வருகிறேன். எனது தொழிலில் ஏற்படும் தொய்வை, நான் உணர்ந்து கொள்ளும் முன்னரே தினமலர் செய்தியாக தந்து, அதற்கும் தீர்வும் தந்த நிகழ்வுகள் ஏராளம். மக்களுக்கு உண்மைகளையும் உண்மையானவர்களையும் அடையாளம் காட்டி, அவர்களுக்கு ஆதரவாக நின்று, நாட்டுக்கு நல்லதை சொல்வதிலும், செய்வதிலும் முன்னோடியாக இருக்கிறது தினமலர். நான் தினமலர் வாசகன்; நான் தினமலர் விளம்பரதாரர்; நான் தினமலர் குடும்பத்தில் ஒருவன். இது எனக்கான பெருமை; இது எனக்குள்ளான பெருமிதம். 75வது ஆண்டை கொண்டாடிக் கொண்டு இருக்கும் தினமலர், பல நுாறு ஆண்டுகள் எம் சந்ததிக்கும், தொடர்ந்து மொழி சேவை செய்து, தேச நன்மையை அடையாளம் காட்ட வேண்டும். அன்புடன், எம்.ஜி.பாலசுப்ரமணியன் எம்.ஜி.பி., எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எம்.ஜி.பி., பர்னிச்சர், திருப்பூர்
11-Apr-2026