உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தினமலர் பவள விழா / படிக்கப் படிக்க ஆர்வத்தை துாண்டும் தினமலர்

படிக்கப் படிக்க ஆர்வத்தை துாண்டும் தினமலர்

வாசகர்களின் இதயங்களில் தமிழ் மணம் வீசும் 'தினமலர்' நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் அவர்களால் துவங்கப்பட்ட தினமலர் நாளிதழ், உண்மையின் உரைகல்லாய் பலகோடி வாசகர்களின் இதயங்களில் இடம் பிடித்து தமிழ் மணம் வீசிக் கொண்டிருக்கிறது. செய்திகளில் துல்லியம், படிக்கப் படிக்க ஆர்வத்தை துாண்டும் துணுக்குகள், மாணவர்களின் முன்னேற்றத்துக்கான கல்வி செய்திகள், தமிழ்நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான உயர்கல்வி மாணவர்களுக்கான வழிகாட்டு முகாம்கள், சமுதாயத்துக்கான பல்வேறு விழிப்புணர்வு செய்திகள், பெண் வாசகர்களுக்கான சமையல் குறிப்புகள், குட்டீஸ்களுக்கான சிறப்பு செய்திகள் மற்றும் விளையாட்டுச் செய்திகள், என பல்துறை செய்திகளால் அனைவரையும் ஈர்த்து வருகிறது. மேலும், ஆன்மிகம், அறிவியல், தொழில் முனைவோருக்கான செய்திகள், உலக நடப்புகள், பெரியோர்கள் மற்றும் தாய்மார்கள் என அனைத்து தரப்பு வாசகர்களையும் தன்னகத்தே கொண்டுள்ள தினமலர், தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப இணைய வழி செய்திகளை உடனுக்குடன் வழங்கி முன்னணியில் திகழ்கிறது. 'தினமலர்' நாளிதழ் தொடர்ந்து வளர்ந்து வெற்றிப் பயணத்தை முன்னெடுத்துச் செல்ல மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த சிறப்பான பயணத்தில் தளராது உழைக்கும் நிர்வாகிகள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் பாராட்டுகளும் நல்வாழ்த்துகளும்! பேராசிரியர் முனைவர் அஜீத்குமார் லால் மோகன்,செயலர், ஏ.ஜே.கே. கல்வி நிறுவனங்கள்; தலைவர், தமிழ்நாடு சுயநிதி கலை, அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லுாரிகள் சங்கம், கோவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி