உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தினமலர் பவள விழா / தினமலர் சேவை அவசியம்

தினமலர் சேவை அவசியம்

'விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை' என்ற கூற்றுக்கேற்ப, 75 ஆண்டுகளுக்கு முன்பாக, பத்திரிகை தர்மத்தின் தந்தை என்று போற்றக்கூடிய, டி.வி.ராமசுப்பைய்யர் அவர்களால், விதைக்கப்பட்ட 'தினமலர்' எனும் தின பத்திரிகை, தினம், தினம் தமிழகமெங்கும், செய்திகளை பரப்பும், மங்கா மலராக மக்களின் மனதில் இடம் பிடித்து விட்டது. தெய்வீகத்தையும், தேசியத்தையும் அடித்தளமாகக் கொண்டு, பலதரப்பட்ட மக்களின் வளர்ச்சியில் அக்கறை கொண்ட நாளிதழாக உலா வருகிறது. விவசாயிகளுக்கு விவசாய மலராகவும், மாணவர்களுக்கு கல்வி மலராகவும், வியாபாரிகளுக்கும், தொழில் முனைவோருக்கும் தொழில் மலராகவும், மகளிர், குழந்தைகள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் அறிவுப்பூர்வமான சிந்தனைகளையும் ஊக்குவிப்பையும் கொடுத்து வரும் மலராக உலா வருகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, உண்மையை உரைப்பதில் நேர்மையும், தவறுகளை தட்டிக் கேட்கின்ற தைரியமும் கொண்ட மலர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தமிழகத்திற்கு மட்டுமல்ல, உலகில் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் தினமலரின் சேவை அவசியம் என்பது நிதர்சனமான உண்மை. நாம் அனைவரும் தினமலரின் சேவைக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டு உள்ளோம். ராஜேஷ்சந்தர் இயக்குனர், கோல் இந்தியா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி