உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தினமலர் பவள விழா / நம்பிக்கை ஒளி தினமலர்

நம்பிக்கை ஒளி தினமலர்

உண்மை செய்திகளின் உரைகல்லாகவும், பாமர மக்களின் ஒற்றை நம்பிக்கையாகவும் திகழும் 'தினமலர்' நாளிதழின் துணிச்சலான இதழியல் பணி ஆச்சரியப்படுத்துகிறது. விழிப்புணர்வு மிக்க சமுதாயத்தை உருவாக்குவதில் தினமலர் நாளிதழின் பங்கு அளப்பரியது. பல தலைமுறைகளை கடந்தும், நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்பவும், தன்னை தகவமைத்துக் கொண்டு சாதனை படைத்து வரும் தினமலரின் சாதனை, மகத்தானதாகும். பல ஆண்டுகளாக நேர்மையும், நம்பிக்கையும் நிறைந்த செய்திகளை, மக்களிடம் கொண்டு சேர்த்து, சமூகத்தின் விழிப்புணர்வையும் பொறுப்புணர்வையும் வளர்த்து வரும், தினமலரின் அர்ப்பணிப்பு, உண்மையிலேயே பாராட்டத்தக்கது. அரசியல், பொருளாதாரம், கல்வி, விளையாட்டு, கலாசாரம் என, அனைத்து துறைகளிலும் துல்லியமான மற்றும் நம்பகமான தகவல்களை வழங்கி, மக்களின் தினசரி வாழ்வில் ஒரு முக்கிய பங்காக தினமலர் விளங்கி வருகிறது. தரமான செய்திகளையும், நல்ல சிந்தனைகளையும், சமூக முன்னேற்றத்திற்கான வழிகாட்டுதல்களையும் வழங்கி, தமிழ் சமூகத்தின் வளர்ச்சிக்கு, பெரும் பங்களிப்பு செய்து, உண்மை மற்றும் நியாயத்தின் பாதையில், எப்போதும் நிலைத்து நின்று, சவால்களை தைரியமாக எதிர் கொண்டு, செய்தித்துறையில் உயர்ந்த தரத்தை நிலைநிறுத்தும், தினமலர் நாளிதழின் பணி அனைவருக்கும் முன்மாதிரியாகும். இன்றைய இளைய தலைமுறைக்கு நம்பிக்கையையும், அறிவையும் வழங்கும் ஒரு ஒளியாக, தினமலர் தொடர்ந்து பிரகாசிக்கட்டும். இன்னும் பல ஆண்டுகள் சிறப்பாக வளர்ச்சி பெற்று, மக்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்து, சமூக நலனுக்காக, மேலும் பல சிறப்பான சேவைகளை செய்ய, தினமலரின் பயணம் தொடர எமது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள். ​ ​டாக்டர். டி. மகிமைதாஸ் மாநில பொதுச்செயலர் தொழில்நுட்ப கல்வித்துறை டாக்டர். அம்பேத்கர் எஸ்.சி., எஸ்.டி பணியாளர் நல சங்கம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை